/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 11, 2024 11:23 PM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் மற்றும் கலால் டி.எஸ்.பி., ஹனுமந்தன் உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், மக்கள் கூடும் பொது இடங்களில் போதை பொருள் ஒழிப்பு மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி கலால் எஸ்.ஐ., முருகவேல் தலைமையிலான போலீசார், நேற்று நகர் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பேருந்து நிலையம், மார்க்கெட், முக்கிய சந்திப்புகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மக்கள் மத்தியில் போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கம் காணப்பட்டாலோ, போதை பொருட்களை யாரேனும் விற்பனை செய்தாலோ, மாவட்ட கலால் பிரிவின், 63799 04848 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் எண் ரகசியம் காக்கப்படும்' என்றனர்.