Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அத்திப்பட்டில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிய அம்மா பூங்கா

அத்திப்பட்டில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிய அம்மா பூங்கா

அத்திப்பட்டில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிய அம்மா பூங்கா

அத்திப்பட்டில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிய அம்மா பூங்கா

ADDED : மார் 28, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீதேவி நகரில் கடந்த, 2017ல், 20 லட்சம் ரூபாயில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

இங்கு நடைபயிற்சி செய்வதற்கான பாதை, இருக்கைகள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், வயதானவர்கள் எளிதாக உடற்பயிற்சி செய்வதற்கான இரும்பு சாதனங்கள், உடற்பயிற்சி கூடமும் அதில் இளைஞர்களுக்கு உபகரணங்களும் பொருத்தப்பட்டன.

தொடர் பராமரிப்பு இல்லாத நிலையில், அம்மா பூங்காவில் உள்ள உபகரணங்கள் சேதம் அடைந்தும், துருப்பிடித்தும் உள்ளன. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களும் துருப்பிடித்தும், உடைந்தும், சேதமாகியும் உள்ளன.

கழிப்பறை கதவுகள், மின்சாதன பொருட்கள் மாயமாகி உள்ளன. வளாகம் முழுதும் புதர் மண்டி உள்ளது.

பயன்பாடு இல்லாத நிலையில், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாலை முதல் நள்ளிரவு வரை வெளிநபர்கள் இங்கு வந்து கஞ்சா புகைப்பது, மது அருந்துவது என உள்ளனர். வெளிநபர்கள் இங்கு வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் குடியிருப்புவாசிகளும் அச்சம் அடைகின்றனர்.

அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு இல்லாமல், அரசின் நிதி முற்றிலும் வீணாகி வருவதுடன், சமூக விரோதிகளுக்கு புகலிடமாக அம்மா பூங்கா மாறி வருவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us