Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஊராட்சி சாலைகள் சீரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு!: ஆறு ஒன்றியங்களில் செயல்படுத்த திட்டம்

ஊராட்சி சாலைகள் சீரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு!: ஆறு ஒன்றியங்களில் செயல்படுத்த திட்டம்

ஊராட்சி சாலைகள் சீரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு!: ஆறு ஒன்றியங்களில் செயல்படுத்த திட்டம்

ஊராட்சி சாலைகள் சீரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு!: ஆறு ஒன்றியங்களில் செயல்படுத்த திட்டம்

ADDED : ஜூன் 24, 2024 04:58 AM


Google News
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், பழுதான ஊராட்சி சாலைகளை சீரமைப்பதற்கு ஆறு ஒன்றியங்களில், 33 கி.மீ., நீளத்திற்கு தார்ச்சாலை மற்றும், 44 சிறுபாலங்கள் அமைப்பதற்கு, பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின், கீழ், 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பெரும்பாலான தார்ச்சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் கிராமங்களுக்கு பேருந்துகள் சென்று வருவதில் சிரமப்படுகின்றன.

அவதி


இதுதவிர விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் மற்றும் களை எடுக்கும் இயந்திரங்கள் சென்று வருவதற்கு முடியாமலும், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் கிராம சபை கூட்டத்தில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கவும், மண் மற்றும் ஜல்லிகற்கள் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் முதற்கட்டமாக திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, மீஞ்சூர், கடம்பத்துார் மற்றும் பூண்டி ஆகிய ஆறு ஒன்றியங்களில், 10 ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பதற்கு, 33 கி.மீ., நீளத்திற்கு தார்ச்சாலை மற்றும் 44 சிறுபாலங்கள் அமைப்பதற்கு, பிரமத மந்திரி கிராம சதக் யோஜனா திட்டம்- 2023- -24 திட்டத்தின் கீழ், 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவட்டத்தில், 526 ஊராட்சிகளில் மிகவும் பழுதடைந்த தார்ச்சாலைகள் மற்றும் அவசரமாக போட வேண்டிய சாலைகள் குறித்து கணக்கெடுத்து ஊராட்சிகளில் இருந்து பெறப்பட்டன.

டெண்டர்


இதில் முதற்கட்டமாக, ஆறு ஒன்றியங்களில், 33 கி.மீ., நீளத்திற்கு தார்ச்சாலைகள் மாற்றுவதற்கும் சிறுபாலங்கள் அமைப்பதற்கும் தீர்மானித்து, நடப்பாண்டில் முதல் தவணையாக பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us