Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி வேளாண்மை துறை ஆலோசனை

வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி வேளாண்மை துறை ஆலோசனை

வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி வேளாண்மை துறை ஆலோசனை

வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி வேளாண்மை துறை ஆலோசனை

ADDED : ஜூன் 10, 2025 11:43 PM


Google News
திருவள்ளூர்:நெல் வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால் மண் வளம் பாதிக்கிறது. பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டு உற்பத்தி குறைகிறது.

பயிர்களை பாதுகாத்து அதிக மகசூல்பெற நெற்பயிரின் வரப்புகளில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதன் வாயிலாக, இயற்கை இரை விலங்கிகளான ஊசி தட்டான், பெருமாள் பூச்சி மற்றும் சிலந்தி எண்ணிக்கை பலமடங்கு பெருகுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தால், தீமை செய்யும் பூச்சிகள் இயற்கை முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

பூச்சி கொல்லிகளின் பயன்பாடு குறைவதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. வரப்பு பயிர் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஆகும். வரப்பு பயிர் சாகுபடி செய்வதற்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட தரமான பயறு விதைகள் ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ போதுமானது. எனவே, அனைத்து விவசாயிகளும் வரப்பு பயிர் சாகுபடி மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us