/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : மார் 20, 2025 02:28 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் ரயில்வே மேம்பாலமும், தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடம் உள்ளது. சென்னை, ஆந்திரா, மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு திசை சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த சந்திப்பின் நடுவே, சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, எப்போதும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. சாலை முழுதும் மறைத்தபடி லாரிகள் நிற்பதால், பின்னால் வரும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றன.
மேலும், சாலையை கடக்கும் பாதசாரிகள், அங்கு நிறுத்தப்படும் லாரிகளின் மறைவில் வரும் பிற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. அதேபோல், மேம்பாலத்தின் இறக்கத்தில் வேகமாக வரும் வாகனங்கள், அந்த இடத்தில் திக்குமுக்காடி போகின்றன.
இதனால், பெத்திக்குப்பம் சந்திப்பு விபத்து அபாய பகுதியாக மாறி வருகிறது. அப்பகுதியில் லாரிகளை நிறுத்த தடை விதித்து, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.