/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு பள்ளியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்அரசு பள்ளியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
அரசு பள்ளியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
அரசு பள்ளியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
அரசு பள்ளியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
ADDED : பிப் 23, 2024 07:26 PM

திருவள்ளூர்:அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு மையம் துவக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆதார் பதிவு மைய துவக்க விழா நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, சுகபுத்ரா தலைமை வகித்து, ஆதார் பதிவு மையத்தை துவக்கி வைத்து கூறியதாவது:
திருவள்ளூர் ஒன்றியம் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆதார் விபரம் புதுப்பிக்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. எனவே ஆதார் எண் பெறாத அல்லது பிழைத்திருத்தம் உள்ளிட்டவை இந்த மையத்தில் சேவை வழங்கப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆதார் மையங்களும் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.