ADDED : ஜன 29, 2024 06:58 AM
திருத்தணி: சோளிங்கர் சோமசுந்தரம் காலனியை சேர்ந்தவர் மணி மகன் நவீன்குமார், 28. இவர் நேற்று தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது தலையாறிதாங்கல் பகுதியில் வந்த போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சாலையில் விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.