/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி பயணியின் உடமைகள் பறிப்புஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி பயணியின் உடமைகள் பறிப்பு
ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி பயணியின் உடமைகள் பறிப்பு
ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி பயணியின் உடமைகள் பறிப்பு
ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி பயணியின் உடமைகள் பறிப்பு
ADDED : ஜன 16, 2024 11:34 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, பிரித்வி நகரைச் சேர்ந்தவர் மேகநாதன், 46. கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் மின்சார ரயிலில் பயணித்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே, உடன் பயணித்த இரு இளைஞர்கள், கத்தி முனையில் மேகநாதனின் மொபைல்போன் மற்றும் மடிக்கணினி பையை கேட்டு மிரட்டினர். தர மறுத்தவரை, கை மற்றும் நெற்றியில் கத்தியால் கிழித்து மொபைல்போன் மற்றும் மடிக்கணினி பையை பறித்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நெருங்கும் முன், ஓடும் ரயிலில் இருந்து இருவரும் இறங்கி தப்பி சென்றனர். மடிக்கணினி, மொபைல்போன், கண்காணிப்பு கேமரா பொருத்தும் கருவிகள் என, மொத்தம் 70,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.
இதையடுத்து, காயமடைந்த மேகநாதன், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குர் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


