/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பாழடைந்த வீட்டில் திருட முயன்றவர் கைதுபாழடைந்த வீட்டில் திருட முயன்றவர் கைது
பாழடைந்த வீட்டில் திருட முயன்றவர் கைது
பாழடைந்த வீட்டில் திருட முயன்றவர் கைது
பாழடைந்த வீட்டில் திருட முயன்றவர் கைது
ADDED : ஜன 27, 2024 11:20 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் பாழடைந்த வீட்டில் ஒருவர் கட்டிங் பிளேடு வைத்து நேற்று முன்தினம் திருட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் அவரை பிடித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாராக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாழடைந்த வீடு சென்னை தேனாம்பேட்டை பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியால் கையகப்படுத்தப்பட்ட வீடு என்றும், அந்த வீட்டில் திருட வந்த நபர் முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேரந்த சுரேஷ், 24 எனவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் சுரேஷை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.