/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டிராக்டர் மீது பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவி - மாணவர் பலிடிராக்டர் மீது பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவி - மாணவர் பலி
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவி - மாணவர் பலி
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவி - மாணவர் பலி
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவி - மாணவர் பலி
ADDED : ஜன 30, 2024 10:43 PM
ஊத்துக்கோட்டை:சென்னை, எருக்கஞ்சேரி, சர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திக், 21. வேல்டெக் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் ஜெயலலிதா, 19 . திருவள்ளூர் அருகே, ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை இருவரும் பைக்கில், ஆந்திர மாநிலம் சென்று விட்டு, ஊத்துக்கோட்டை தண்டலம் வழியே சென்று கொண்டு இருந்தனர். தண்டலம் அருகே சென்றபோது, பைக்கை ஜெயலலிதா ஓட்டினார். வேகமாக சென்ற பைக் நிலை தடுமாறி, சாலையில் நின்று கொண்டு இருந்த டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பெரியபாளையம் போலீசார் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.