Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி, வல்லக்கோட்டையில் ஒரே நாளில் 87 திருமணம்

திருத்தணி, வல்லக்கோட்டையில் ஒரே நாளில் 87 திருமணம்

திருத்தணி, வல்லக்கோட்டையில் ஒரே நாளில் 87 திருமணம்

திருத்தணி, வல்லக்கோட்டையில் ஒரே நாளில் 87 திருமணம்

ADDED : செப் 05, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவில், வல்லக்கோட்டை, குமரகோட்டம் முருகன் கோவிலில், முகூர்த்த நாளையொட்டி, நேற்று ஒரே நாளில் 87 திருமணங்கள் நடந்தன.

திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் முன்பதிவு செய்து திருமணங்கள் நடந்து வருகின்றன.

தவிர முருகன் மலைக்கோவிலில் உள்ள ஆர்.சி.சி. மண்டபம், உச்சிபிள்ளையார் மண்டபம், தேர் மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம் ஆகிய இடங்களில் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான கட்டணம் செலுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், முருகன் மலைக்கோவிலில் 47 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

வல்லக்கோட்டை, குமரகோட்டம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார்.

நேற்று, திருமண முகூர்த்த நாள் என்பதால், கோவிலில் 32 திருமணங்கள் நடந்தன. அதில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலி மற்றும் கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட, 70,000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 26 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருமணம் நடந்தது.

இதில், கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில் தேவராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நேற்று எட்டு ஜோடிகளுக்கு சீர் வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி, அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us