/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துாய்மை பணியாளர் 7 பேருக்கு பாராட்டு துாய்மை பணியாளர் 7 பேருக்கு பாராட்டு
துாய்மை பணியாளர் 7 பேருக்கு பாராட்டு
துாய்மை பணியாளர் 7 பேருக்கு பாராட்டு
துாய்மை பணியாளர் 7 பேருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 18, 2025 07:58 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் சிறப்பாக பணிபுரிந்த ஏழு துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், தினமும் 25 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பையை தனியார் நிறுவன துப்புரவு பணியாளர்கள், 145 பேர் மற்றும் நகராட்சி நிரந்தர பணியாளர் 44 பேர் வீடுதோறும் சென்று, குப்பையை தரம் பிரித்து பெற்று வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில், 'என் குப்பை, என் பொறுப்பு' நிகழ்ச்சி வாயிலாக, பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வீடு, வீடாகச் சென்று குப்பையை தரம் பிரித்து, அதை உரிய முறையில் நுண்ணுயிர் மையத்திற்கு ஒப்படைக்கும் பணியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நகராட்சி தலைவர் உதயமலர் தலைமையில், கமிஷனர் தாமோதரன், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர், மூன்று நிரந்தர துாய்மை பணியாளர் மற்றும் நான்கு ஒப்பந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.