/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல் 'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்
'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்
'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்
'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்
ADDED : ஜூன் 18, 2025 08:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் , திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.'
பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. கலெக்டர் பிரதாப் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 பட்டா வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.