/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம்
மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம்
மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம்
மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம்
ADDED : மே 31, 2025 03:00 AM

திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இக்கோவிலில் பூஜை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாகவே, மத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு, உபயதாரர்கள் வாயிலாக வழங்கிய 62 கிலோ வெள்ளியால் ஆன கவசத்தை, அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு, உபயதாரர் பாமாசந்திரன் ஆகியோர் முன்னிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.