/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ 3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது ரூ 3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
ரூ 3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
ரூ 3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
ரூ 3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
ADDED : செப் 02, 2025 12:29 AM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 590 கிலோ எடை கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, கடத்திய ஆறு பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்த சரக்கு வாகனம் வாயிலாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனம் ஒன்றையும், அதை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றையும் நிறுத்தி சோதனையிட்டனர். சரக்கு வாகனத்தில், இருந்த 590 கிலோ எடை உள்ள கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச சந்தை மதிப்பு, மூன்று கோடி ரூபாயாகும்.
சரக்கு வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்து அவற்றில் பயணித்த படி கஞ்சா கடத்திய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள், புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராமநாதன், 35, ஷேக் அப்துல்லா கமர்தீன், 31, புதுக்கோட்டை அருகே மணல்மேல்குடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, 28, தஞ்சாவூர் குருங்குளம் பகுதியை சேர்ந்த வினோத் பூசலிங்கம், 36, கோவையை சேர்ந்த பாரதி, 31, மணிகண்டன், 35, ஆவர்.
கைதான ஆறு பேரும் சர்வதேச அளவில் கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. போலீசார், ஆறு பேரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.