/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/33.36 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கற்கள் பதிப்பு33.36 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கற்கள் பதிப்பு
33.36 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கற்கள் பதிப்பு
33.36 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கற்கள் பதிப்பு
33.36 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கற்கள் பதிப்பு
ADDED : ஜன 30, 2024 07:52 PM

கும்மிடிப்பூண்டி:தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளிவீடு செய்து, அத்துறையின் பெயர் பதிக்கப்பட்ட கற்களை நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலுார் மண்டல இணை ஆணையர் விஜயா உத்தரவுபடி, கும்மிடிப்பூண்டி அருகே பாப்பாங்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நேற்று ரோவர் கருவி வாயிலாக அளவீடு செய்யப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் கண்ணன், செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான நில அளவையர்கள், கோவிலுக்கு சொந்தமான, 33.63 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, கற்களை நட்டனர்.