/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள்
UPDATED : செப் 20, 2025 03:34 AM
ADDED : செப் 20, 2025 02:37 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கூடுதலாக 304 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளில், 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுதும் 1,315 பள்ளிகளில், 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
![]() |
இந்திய தேர்தல் ஆணையம், ஒரு ஓட்டுச் சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதை பிரித்து, ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் உள்ள 3,699 ஓட்டுச்சாவடிகளில், 697ல் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். இதையடுத்து, புதிதாக 304 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதாப் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்பின், அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள 3,699 ஓட்டுச்சாவடிகளில், 697ல், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது புல தணிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த ஓட்டுச்சாவடிகளில், 1,200 வாக்காளர்கள் என்ற அளவில், 304 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக பிரிக்கப்பட்டு உள்ளன. மேலும், ஓட்டுச்சாவடி இணைப்பு, பெயர் மாற்றம் மற்றும் கட்டடம் இடமாற்றம் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
![]() |
இதுகுறித்து, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்தை, ஏழு நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் விபரம்:
தொகுதி தற்போதைய ஓட்டுச் சாவடி கூடுதல் ஓட்டுச்சாவடி மொத்தம்
கும்மிடிப்பூண்டி 330 14 344 பொன்னேரி(தனி) 313 14 327 திருத்தணி 330 7 337 திருவள்ளூர் 296 37 333 பூந்தமல்லி(தனி) 397 55 452 ஆவடி 457 42 499 மதுரவாயல் 440 42 482 அம்பத்துார் 350 14 364 மாதவரம் 475 46 521 திருவொற்றியூர் 311 33 344 மொத்தம் 3,699 304 4,003