/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி 300 மாணவ - மாணவியர் பங்கேற்புதிருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி 300 மாணவ - மாணவியர் பங்கேற்பு
திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி 300 மாணவ - மாணவியர் பங்கேற்பு
திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி 300 மாணவ - மாணவியர் பங்கேற்பு
திருவள்ளூரில் மினி மாரத்தான் போட்டி 300 மாணவ - மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜன 11, 2024 12:37 AM

திருவள்ளூர்:தமிழகத்தில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில், வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த மினி மாரத்தான் போட்டியை, கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விளையாட்டு அரங்கில் துவங்கிய மாரத்தான் போட்டி, வட்டார போக்குவரத்து அலுவலக சாலை, திருத்தணி - திருவள்ளூர் சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று, மீண்டும் அரங்கத்தை வந்தடைந்தது.
இதில், 100 மாணவியர், 200 மாணவர்கள் என, மொத்தம் 300 பேர் பங்கேற்றனர். போட்டியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சேதுராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ - மாணவியருக்கு, வரும் 17ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் பரிசுகள் வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துஉள்ளார்.