/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குண்டும் குழியுமான சாலையில் 20 கிராம மக்கள் பீதியில் பயணம் குண்டும் குழியுமான சாலையில் 20 கிராம மக்கள் பீதியில் பயணம்
குண்டும் குழியுமான சாலையில் 20 கிராம மக்கள் பீதியில் பயணம்
குண்டும் குழியுமான சாலையில் 20 கிராம மக்கள் பீதியில் பயணம்
குண்டும் குழியுமான சாலையில் 20 கிராம மக்கள் பீதியில் பயணம்
ADDED : செப் 21, 2025 11:53 PM

கும்மிடிப்பூண்டி:நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள கிராமப்புற சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமான நிலையில் இருப்பதால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு அருகே, கங்காணிமேடு - பனஞ்சாலை சந்திப்பில் துவங்கி கங்காணிமேடு, மேட்டுப்பாளையம், ராமய்யன்பாளையம், சேலியம்பேடு, சின்னமாங்கோடு வரையிலான, 7 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலை, மீஞ்சூர் ஒன்றிய சாலையாக இருந்தபோது, ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.
அதன்பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இச்சாலையை பயன்படுத்தி வரும், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் சாகச பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
விபத்துக்கு வழிவகுக்கும் சூழல் உள்ளதால், மாநில நெடுஞ்சாலைத் துறையினர், கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உடனடியாக சாலையை புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.