/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தும்போது சிக்கியது1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தும்போது சிக்கியது
1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தும்போது சிக்கியது
1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தும்போது சிக்கியது
1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தும்போது சிக்கியது
ADDED : ஜன 05, 2024 08:25 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ரயில் நிலைய சாலை வழியாக காஞ்சிபுரத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அரிசந்திராபுரம் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில், 36 கோணிப்பைகளில், 1800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் திருவாலங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, காஞ்சிபுரத்தில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றது தெரிந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த காஞ்சிபுரம் நகரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த இம்தியாஸ், 2 0 மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் தெருவை சேர்ந்த மோகன், 32 என்பவரையும் கைது செய்த போலீசார், அரசி கடத்திய வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.