/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாய சங்கத்தினர் 161 பேர் கைது கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாய சங்கத்தினர் 161 பேர் கைது
கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாய சங்கத்தினர் 161 பேர் கைது
கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாய சங்கத்தினர் 161 பேர் கைது
கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாய சங்கத்தினர் 161 பேர் கைது
ADDED : மார் 26, 2025 08:20 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சித்துார் - தச்சூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் திண்டிவனம் - நகரி ரயில் பாதை பணிகளுக்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டும், குறைந்த அளவிலான இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், கலெக்டர், கோட்டாட்சியர் அலுலகங்களில் மனு அளித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
நேற்று திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் டில்லிபாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலர் துளசிநாராயணன் முன்னிலை வகித்தார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் திரண்ட நிலையில், கலெக்டர் அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் துவங்கியதும், அவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 122 ஆண், 39 பெண் என, 161 பேர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.