/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டாஸ்மாக் பாரில் 151 மது பாட்டில்கள் பறிமுதல்டாஸ்மாக் பாரில் 151 மது பாட்டில்கள் பறிமுதல்
டாஸ்மாக் பாரில் 151 மது பாட்டில்கள் பறிமுதல்
டாஸ்மாக் பாரில் 151 மது பாட்டில்கள் பறிமுதல்
டாஸ்மாக் பாரில் 151 மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : பிப் 23, 2024 07:20 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி ஐவேலி அகரத்தில் அரசு டாஸ்மார்க் கடையில் அரசு அனுமதியுடன் மதுபானக்கூடம் இயங்கி வருகிறது.
இங்கு மது பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் அரசு டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது டாஸ்மாக் மதுக்கூடத்தில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வந்த வேப்பம்பட்டு வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்த சந்திரசேகர், 45, மற்றும் சின்ன காஞ்சிபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சுதர்சன், 44, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 பீர்பாட்டில்கள், 19 குவார்ட்டர் பாட்டில்கள் என, மொத்தம் 151 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து திருவள்ளூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.