/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/11 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தி வந்த 8 பேர் கைது11 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தி வந்த 8 பேர் கைது
11 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தி வந்த 8 பேர் கைது
11 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தி வந்த 8 பேர் கைது
11 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தி வந்த 8 பேர் கைது
ADDED : ஜன 03, 2024 10:14 PM

சென்னை:இலங்கையில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, சென்னை வந்தது.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட, ஐந்து பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து தங்கப் பசைகள், சிறிய தங்கத் துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், இலங்கையில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, சென்னை வந்தது.
சந்தேகத்திற்குரிய மூன்று பேரை நிறுத்தி, சோதனை செய்தபோது, தங்கப் பசைகள், தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
மொத்தம், 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கிலோ தங்கத்தை, நேற்று பறிமுதல் செய்துள்ளனர். எட்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.