/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ யங்கஸ்ட் டை வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., சாம்பியன் யங்கஸ்ட் டை வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
யங்கஸ்ட் டை வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
யங்கஸ்ட் டை வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
யங்கஸ்ட் டை வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
ADDED : ஜூன் 18, 2024 05:52 AM
சென்னை: மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்ணா கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, கும்பகோணத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் சென்னை, திருவள்ளூர் உட்பட, மாநிலம் முழுதும் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடந்தன.
அரையிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 71 - 63 என்ற கணக்கில் ஜேப்பியார் அணியை தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் யங்கஸ்ட் பி.பி.சி., அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 66 - 45 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.
அதைத்தொடர்ந்து, யங்கஸ்ட் பி.பி.சி., அணி, ஜேப்பியார் பல்கலை, இரா.துரை பி.பி.சி., அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.