/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மன அழுத்தம் குறைய போலீசாருக்கு யோகா மன அழுத்தம் குறைய போலீசாருக்கு யோகா
மன அழுத்தம் குறைய போலீசாருக்கு யோகா
மன அழுத்தம் குறைய போலீசாருக்கு யோகா
மன அழுத்தம் குறைய போலீசாருக்கு யோகா
ADDED : ஜூன் 16, 2024 12:54 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியம் போலீசாருக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சல் உள்ளது. இதை போக்கும் வகையில்,போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்திரவிட்டார்.
இதையடுத்து திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், திருத்தணி உட்கோட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சிறப்பு யோகா பயிற்சி திருத்தணியில் நேற்று நடந்தது.
இந்த பயிற்சியில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் யோகா செய்தனர். மேலும் போலீசார் பணியின் போது ஏற்படும் மன அழுத்தம் குறைப்பதற்கு மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.