/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 12, 2024 09:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி கலெக்டர்-பயிற்சி ஆயுஷ்குப்தா இப்பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:
உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் தாக்கத்தையும், தீய விளைவுகள் ஏற்படுவதையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1989ல், ஜூலை 11ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்க வேண்டும் என தீர்மானித்தது.
மக்கள் தொகை தின விழா மூன்று கட்டமாக கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல், பெண் கல்வி அளித்தல், பெண்ணிற்கு சம உரிமை அளித்தல்;
ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரக மருத்துவமனைகளில் முகாம்கள் நடத்தி இலக்கினை அடைய பெண்களுக்கான 'லேப்ராஸ்கோப்' குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவியரின் மவுன மொழி விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரேவதி, இணை இயக்குநர் நலப் பணிகள் மீரா, துணை இயக்குனர்கள் ராணி, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.