/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பார்க்கிங் ஏரியாவான மகளிர் குழு கட்டடம் பார்க்கிங் ஏரியாவான மகளிர் குழு கட்டடம்
பார்க்கிங் ஏரியாவான மகளிர் குழு கட்டடம்
பார்க்கிங் ஏரியாவான மகளிர் குழு கட்டடம்
பார்க்கிங் ஏரியாவான மகளிர் குழு கட்டடம்
ADDED : ஜூன் 08, 2024 12:57 AM

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர் ஊராட்சி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை இப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த கட்டடம் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பில்லாததால் புதர் மண்டி வீணாகி வருவதோடு பெண்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தற்போது இந்த கட்டடம் வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டுமென கொப்பூர் பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.