Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

ADDED : ஜூன் 04, 2024 06:25 AM


Google News
திருவள்ளூர், : திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஏப்., முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயிலால் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது.

மேலும், அனல் காற்று வீசியதால், மக்கள் சாலையில் நடமாட முடியாமல், வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இதுவரை இல்லாத அளவிற்கு, 112 டிகிரி அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இரண்டு நாட்களும் கடும் அனல்காற்று வீசியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது.

நேற்று காலை நிலவரப்படி, பூந்தமல்லியில் 1.9 செ.மீட்டர், தாமரைப்பாக்கத்தில் 1.8 செ.மீட்டர் மழை பதிவாகியது. பள்ளிப்பட்டில் - 1, ஆர்.கே.பேட்டை - 0.6, திருவள்ளூர் - 0.23, ஆவடி - 0.2 செ.மீட்டர் அளவில் மழை பெய்தது.

நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது. சில இடங்களில், சிறிய அளவில் மழை பெய்தது. இதனால், இரண்டு மாதத்திற்கும் மேலாக, அனலில் தவித்த மக்களுக்கு, இந்த கோடை மழை வெப்பத்தை சற்று தணித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us