/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீமிதி திருவிழா நிறைவு பாலாபுரத்தில் விமரிசை தீமிதி திருவிழா நிறைவு பாலாபுரத்தில் விமரிசை
தீமிதி திருவிழா நிறைவு பாலாபுரத்தில் விமரிசை
தீமிதி திருவிழா நிறைவு பாலாபுரத்தில் விமரிசை
தீமிதி திருவிழா நிறைவு பாலாபுரத்தில் விமரிசை
ADDED : ஜூன் 04, 2024 06:27 AM

ஆர்.கே.பேட்டை, : ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் மற்றும் மகன்காளிகாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது.
மூன்று வாரங்களாக நடந்து வரும் இந்த திருவிழாவில், வில் வளைப்பு, ராஜசுய யாகம், அர்ச்சுனன் தபசு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், பகாசூரன் கும்பம், சக்தி கரகம் ஊர்வலம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி பாலாபுரம், மகன்காளிகாபுரம் கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவின், 18ம் நாளான நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பிரமாண்டமான துரியோதனன் களிமண் சிலையை ஒட்டி, 18ம் போர்க்கள நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார்.
மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரவுபதியம்மனுடன் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நேற்று காலை தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.