ADDED : ஜூன் 11, 2024 05:03 AM

வண்டலுார்:தாம்பரம் அடுத்த வண்டலுாரில், நேற்று மாலை 5:00 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து 10 நிமிடங்கள் வீசிய சூறைக்காற்றில், சிங்காரத்தோட்டம் பகுதியில், ரயில் பாதை சுற்றுச்சுவர் உட்பக்கமாக உள்ள மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
இதில், மின் கம்பத்தில் இருந்து மசூதி தெருவுக்கு செல்லும் மின் கம்பிகள், ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியதால், உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள், அப்பகுதி முழுதும் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், சிங்காரதோட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் இருளில் மூழ்கின.