/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை
சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை
சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை
சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை
ADDED : மார் 12, 2025 06:58 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 168 தெருக்கள் உள்ளன. இதில், 3,930 குடியிருப்புகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. தினமும், இரண்டு டன் அளவிற்கு குப்பை சேர்கிறது. இதற்காக பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, 26 பேர் குப்பையை அள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குப்பையை சேகரிக்கின்றனர்.
மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து அதில் உரங்கள் தயார் செய்யப்படுகிறது. தினமும் துாய்மை பணியாளர்கள் காலையில் குப்பையை சேகரிக்கின்றனர். நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள, சாலையில் குப்பையை கொட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சாலையில் குப்பையை கொட்டாமல், துாய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, போலீஸ் நிலையம் அருகே, சத்தியவேடு சாலை, நேரு பஜார் உள்ளிட்ட ஐந்து இடங்களில் குப்பையை சாலையில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பேனர் வைத்துள்ளது.