/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் நகர்ப்புற துணை சுகாதார நிலையம்
ADDED : ஜூன் 01, 2024 05:59 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சி, 16 வார்டு ஜோதிநகர் பகுதியில் தேசிய ஊரக சுகாதார இயக்கம், 2023-- 24ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நகர்புற துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடித்து கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இங்கு, கர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.
இதுதவிர அவசர கால சிகிச்சை மற்றும் முதலுதவி அப்பகுதி மக்களுக்கு வழங்கம் வகையில், இந்த துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
ஆனால், அரசு நகர்புற துணை சுகாதார நிலையம் தினமும் திறந்து மக்களுக்கு சிகிச்சை, முதலுதவி அளிக்காமல், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் திறந்து, தடுப்பூசி மட்டும் போடப் படுகிறது.
அதுவும் சில மணி நேரம் மட்டுமே செவிலியர் இருந்து விட்டு சென்றுவிடுவர்.
மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்திய துணை சுகாதார நிலையம் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படுவதற்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுள்ள கட்டடம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நகர்புற துணை சுகாதார நிலையம் திறந்து மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.