/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் உளுந்தை வாலிபருக்கு சிறை வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் உளுந்தை வாலிபருக்கு சிறை
வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் உளுந்தை வாலிபருக்கு சிறை
வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் உளுந்தை வாலிபருக்கு சிறை
வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் உளுந்தை வாலிபருக்கு சிறை
ADDED : ஜூன் 04, 2024 06:07 AM
கடம்பத்துார், : கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அருகே உளுந்தை ஊராட்சி உள்ளது. இங்கு, குமரன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 29ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது நிலத்தை அளவீடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த உளுந்தை வடுகர் காலனியைச் சேர்ந்த லோகேஸ்குமார், 34, என்பவர் வி.ஏ.ஓ.,வை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், லோகேஸ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.