கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 28. கடந்த மாதம், 29ம் தேதி வெளியில் சென்றவர் திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவரை தேடி பார்த்தனர். தகவல் ஏதும் கிடைக்க பெறாததால், ஆரம்பாக்கம் போலீசில் அவரது மனைவி ஜெயமாலினி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சரண்யா, 35. கடந்த மாதம், 26ம் தேதி, கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கணவன் அளித்த புகாரின் பேரில், கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.