ADDED : ஜூன் 29, 2024 12:06 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியை சேர்ந்த நாராயணன், 36, செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோபிநாத், 35, ஆகியோரிடம், 25 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.