போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 09:51 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில், பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த சென்னை, அம்பத்துார் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத், 23, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்தர், 24, ஆகியோரிடம் போதை தரக்கூடிய 1,500 'நைட்ரோவெட்' மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.