ADDED : ஜூலை 17, 2024 08:25 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி போலீசார் ரோந்து பணி சென்றபோது, தாமரை ஏரி அருகே இருவர் சந்தேகபடும்படி நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களை சோதனையிட்ட போது, அவர்களிடம், 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சாமிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 26, மீஞ்சூர் அடுத்த புங்கமேடைச் சேர்ந்த கமலேஷ், 24, என்பது தெரிந்தது. இருவர் மீதும் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.