/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது
வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது
வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது
வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது
ADDED : ஜூன் 07, 2024 02:24 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சூர்யா, 25. கடந்த, 2ம் தேதி கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சூர்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
தர மறுத்த சூர்யாவை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிக்கொண்டு தப்பினர்.
இச்சம்பவம் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பொன்னேரி போலீசார் விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர்.
பின், சென்னை எண்ணுாரைச் சேர்ந்த முன்னா, 29, தினேஷ்குமார், 29, ஆகியோர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பியோடும்போது கீழே விழுந்தனர்.
இதில், இருவருக்கும் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.