ADDED : ஜூன் 09, 2024 10:55 PM
கடம்பத்துார்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் பட்டேல் காம்ப்ளக்ஸ் அருகே நின்று கொண்டிருந்த இருவர் போலீசாரைக் கண்டதும் ஓட முயன்றனர்.
இதையடுத்து மணவாள நகர் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 47 மற்றும் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகப்பன், 58 என தெரிய வந்தது.
இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.