/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மது கேட்டு பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை மது கேட்டு பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை
மது கேட்டு பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை
மது கேட்டு பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை
மது கேட்டு பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை
ADDED : மார் 14, 2025 11:04 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி, 32, அன்பழகன், 33. கடந்த மாதம் 12ம் தேதி ஏரி அருகே அமர்ந்து, இருவரும் மது அருந்தினர்.
அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, 28, என்பவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, இருவரும் மது வாங்கி தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அண்ணாமலையை, இருவரும் பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்தவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அண்ணாமலையின் தந்தை சேகர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் சக்கரவர்த்தி, அன்பழகனை தேடி வருகின்றனர்.