/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி
பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி
பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி
பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி
ADDED : ஜூன் 14, 2024 09:12 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அம்சா நகரை சேர்ந்தவர் அரி கிருஷ்ணன், 24, கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை தன் நண்பர்கள் சீனிவாசன், 24, சின்ன ராசு, 26 ஆகியோருடன் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் திருவள்ளுவர் அடுத்த தடுக்குப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தார். மூவரும் 'ஹெல்மெட்' அணியவில்லை.
அந்த வழியாக வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் அரிகிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய இருவரும் பலியாயினர். படுகாயம் அடைந்த சின்னராசு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுனரான ஆந்திர மாநிலம் குண்டூர் பரங்கிப்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராவ், 45 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.