/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு திருவாலங்காடில் போக்குவரத்து நெரிசல் சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு திருவாலங்காடில் போக்குவரத்து நெரிசல்
சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு திருவாலங்காடில் போக்குவரத்து நெரிசல்
சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு திருவாலங்காடில் போக்குவரத்து நெரிசல்
சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு திருவாலங்காடில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 26, 2024 02:36 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடின் மைய பகுதியில், நான்குமுனை சந்திப்பில் உள்ள பேருந்து நிலையத்தை சுற்றி மணவூர், அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் பிரதான சாலைகளில், பயணியரை ஏற்றி செல்ல காத்திருக்கும் ஆட்டோக்களால், வாகனங்கள் செல்ல வழியில்லாமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் செல்லும் நேரத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இவ்வாறு நிறுத்தப்படும் ஆட்டோக்களை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. மேலும், ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால், பேருந்துகள் செல்லும் நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
எனவே, ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பதை தடுக்க, திருவாலங்காடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.