ADDED : ஜூன் 08, 2024 05:29 AM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, ஆட்ரம்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் திருட்டு மணல் எடுப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பென்னலுார்பேட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளி கொட்டுவது தெரிந்தது.
போலீசாரைக் கண்டதும் வாகன ஓட்டுனர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, டிராக்டரை பறிமுதல் செய்து, ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.