/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம் திருத்தணி காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம்
திருத்தணி காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம்
திருத்தணி காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம்
திருத்தணி காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம்
ADDED : ஜூலை 21, 2024 06:59 AM
திருத்தணி: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு கோப்பை வழங்கப்படும். இதற்காக காவல் துறை அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மண்டல வாரியாக உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்வார்கள்.
இந்த ஆய்வில் குற்ற வழக்குகளில் துப்பு துலக்கியது, குற்றவாளிகளைக் கைது செய்தது, தண்டனை பெற்றுத் தந்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தது, பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொண்டது, காவல் நிலையத்தில் சுகாதாரம் - தூய்மையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடப்படும்.
அந்த வகையில், கடந்த 2022 - - 23ம் ஆண்டின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வடக்கு மண்டல சரகத்தில், சிறந்த காவல் நிலையமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போலீஸ் நிலையம் முதலிடம் பிடித்துள்ளன.
இரண்டாவது இடம் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையமும், மூன்றாவது இடம் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம், நான்காம் இடம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையம் என மொத்தம் 10 போலீஸ் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்த போலீஸ் நிலையங்களுக்கு நாளை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கோப்பை வழங்கவுள்ளார் என தெரிய வந்துள்ளது. சிறப்பாக செயல்பட்ட திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ.,ராக்கிகுமாரி ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்படவுள்ளது.