/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி மலைக்கோவிலில் நிழற்குடை பணி 'தொய்வு' திருத்தணி மலைக்கோவிலில் நிழற்குடை பணி 'தொய்வு'
திருத்தணி மலைக்கோவிலில் நிழற்குடை பணி 'தொய்வு'
திருத்தணி மலைக்கோவிலில் நிழற்குடை பணி 'தொய்வு'
திருத்தணி மலைக்கோவிலில் நிழற்குடை பணி 'தொய்வு'
ADDED : ஜூன் 28, 2024 02:51 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் மூலவரை தரிசிக்க, இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வசதி கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
மலைக்கோவிலில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தேர்வீதியில் நீண்ட வரிசையில் வெயில் மற்றும் மழையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதி மற்றும் தள்ளுமுள்ளு இல்லாமல் மூலவரை தரிசிக்க தேர்வீதியில் பாதியளவுக்கு நிழற்குடை ஏற்படுத்தியது.
ஆனால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தேர்வீதி முழுதும் பக்தர்கள் வெயில், மழையில் நின்று மூலவரை தரிசிக்கின்றனர்.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கூடுதல் நிழற்குடை அமைப்பதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் நிழற்குடை பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது தினமும் திருத்தணியில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதாலும், மாலை மற்றும் இரவில் மழை பெய்வதாலும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் நிழற்குடை அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.