/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி திருத்தணி நெடுஞ்சாலை துறை அலட்சியம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி திருத்தணி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி திருத்தணி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி திருத்தணி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி திருத்தணி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
ADDED : ஜூன் 11, 2024 05:02 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சி, ம.பொ.சி.சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்ற வாறு இருக்கும். மேலும் இச்சாலையில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை என்பதாலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, அக்கைய்யநாயுடு சாலை மற்றும் உச்சி பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ம.பொ.சி.சாலை நெடுஞ்சாலை துறையின் கால்வாய் வழியாக, ரயில்வே துறைக்கு சொந்தமான கால்வாய் மூலம் மீண்டும் நகராட்சி கால்வாய் வழியாக சென்றடைகிறது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் கால்வாய் புதைந்ததால், கழிவுநீர் ரயில்வே தண்டவாளம் மற்றும் தானியங்கி கேட் பாதை வழியாக அடிக்கடி செல்கிறது. மேலும் மழை பெய்யும் போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து தண்டவாளம் தண்ணீரில் மூழ்குவதால் ரயில்கள் செல்வதற்கு கடும் சிரமப்படுகிறது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம், நகராட்சி கழிவுநீர் ரயில்வே கால்வாய்க்கு வரமுடியாத வண்ணம் மண்கொட்டி நிரப்பியது. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் ம.பொ.சி.சாலையில் குளம் போல் தேங்கியுள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நடந்து செல்லும் மக்கள் கழிவுநீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் அகற்றுவதற்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்கின்றனர்.