/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.. திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்..
திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்..
திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்..
திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்..
ADDED : ஜூன் 24, 2024 04:55 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. கருட சேவை கடந்த 19ம் தேதி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 7:30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெகந்நாத பெருமாள் தேரில் எழுந்தருள காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
இதில் பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:30 மணிக்கு கோவிலை அடைந்தது.
நாளை 25ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.