/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திடீரென எதிரில் வந்த வேன் சுவரில் பஸ் மோதி பெண் பலி திடீரென எதிரில் வந்த வேன் சுவரில் பஸ் மோதி பெண் பலி
திடீரென எதிரில் வந்த வேன் சுவரில் பஸ் மோதி பெண் பலி
திடீரென எதிரில் வந்த வேன் சுவரில் பஸ் மோதி பெண் பலி
திடீரென எதிரில் வந்த வேன் சுவரில் பஸ் மோதி பெண் பலி
ADDED : ஜூன் 23, 2024 10:15 AM

சோழவரம், : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை, 6:30 மணிக்கு, அரசு பேருந்து தடம் எண். 112பி சத்தியவேடு நோக்கி புறப்பட்டது. பேருந்தில், 34 பயணியர் இருந்தனர்.
செங்குன்றம் பேருந்து நிலையம் வந்தபோது, 20 பயணியர் இறங்கினர். மீதம் இருந்த, 14 பயணியருடன் பேருந்து சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து பயணித்தது.
சோழவரம் அடுத்த செம்புலிவரம் அருகே செல்லும்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றி வந்த வேன் அங்குள்ள மீடியனை கடந்து, எதிர் திசையில் பயணித்தது.
இதை கவனித்த அரசு பேருந்து டிரைவர், சுதாரித்து விபத்தை தவிர்க்க பேருந்தை இடதுபுறமாக திருப்பினார். அதற்குள் லோடு வேன் பேருந்தை உரசியபடி சென்றது.
அப்போது பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுற தடுப்பு சுவரை உடைத்து அணுகுசாலையில் பயணித்து, அங்குள்ள பெட்ரோல் பங்க் சுவரில் மோதி நின்றது.
பேருந்தில் இருந்த பயணியர் அலறினர். இதில், பேருந்தில் பயணித்த பொன்னேரி அடுத்த வடக்குநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த சுதா, 45, ஜன்னல் ஒரம் அமர்ந்திருந்ததால், அங்கிருந்த கம்பி தலையில் குத்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்திற்கு காரணமான வேன் டிரைவர் தோஸ்த், 35, மற்றும் பேருந்தில் பயணித்த, நான்கு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.