/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு
அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு
அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு
அத்திப்பட்டில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 04:21 AM
சென்னை, : 'கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் உள்ள அத்திப்பட்டில், குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்; அங்கு கொட்டப்பட்ட குப்பையை அகற்ற வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பாயத்தில், குமரேசன் சூளூரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
'திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, அருகில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு கொட்டப்பட்ட குப்பையை அகற்றி சீரமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டப்படும் பகுதி, கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்கு உட்பட்டது. எனவே, அங்கு குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாது, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற, அத்திப்பட்டு ஊராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், திருவள்ளூர் கலெக்டர், அத்திப்பட்டு ஊராட்சி ஆகியவை, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆக., 2-ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.