/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா காவடி தயாரிக்கும் பணி மும்மரம் திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா காவடி தயாரிக்கும் பணி மும்மரம்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா காவடி தயாரிக்கும் பணி மும்மரம்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா காவடி தயாரிக்கும் பணி மும்மரம்
திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா காவடி தயாரிக்கும் பணி மும்மரம்
ADDED : ஜூலை 26, 2024 02:47 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழா, வரும் 27 முதல் 31ம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் மலர் காவடிகள் தயாரிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில், திருத்தணி பெரியார் நகரில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூங்கில் காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில், இரு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காவடி கூடைகள் பின்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஜதை காவடி கூடை, 100--- - 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே காவடி கொம்பு, மணி மற்றும் துணியுடன், 500 - ---700 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மூங்கில் காவடி கூடை தொழிலாளி கூறியதாவது:
கடந்த 35 ஆண்டுகளாக காவடி கூடைகள், பூக்கூடை, சாப்பாடு வடிகட்டு கூடை, காய்கறி கூடை உள்ளிட்டவற்றை மூங்கில் கொம்புகள் கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
ஆடிக்கிருத்திகை விழா என்றால், ஆனி மாதம் முதலே காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். ஒரு நாளைக்கு, 10 - ---12 ஜதை காவடி கூடைகள் ஒரு நபர் தயாரிக்கலாம்.
ஒரு ஜதை கூடை தயாரிப்பதற்கான செலவு, 40-- - 60 ரூபாய். எங்களுக்கு அரசு வட்டியில்லாத கடனுதவி வழங்கினால், வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்.
ஆனால், அரசு சார்பில் கடனுதவி வழங்காததால், தனியார் நபர்களிடம், 2 ரூபாய் வட்டி வீதம் கடன் வாங்கி காவடி கூடைகள் தயாரிப்பதால், போதிய வருவாயை ஈட்ட முடியவில்லை. எனவே, அரசு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.